அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாகாணத்தில் வசித்து வருபவர் ஜென்னா சினாட்ரா. 21 வயதாகும் இந்த பெண் ஒரு நாள் தீவிரமாக கொட்டாவி விட்டபோது அவருடைய வாய் தாடை மூடாமல் அப்படியே திறந்த நிலையில் சிக்கிக் கொண்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் தன்னுடைய வாயை இயல்பு நிலைக்கு கொண்டு வருவதற்கு முயற்சி செய்து உள்ளார்.

எவ்வளவோ முயற்சி செய்தும் முடியாததால் பிறகு பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்யும் ஒரு நிபுணரை அவர் நாடியுள்ளார். பின்னர் அவருடைய உதவி மூலமாக அழிக்கப்பட்ட சிகிச்சையின் மூலம் தற்போது அவருடைய வாயில் இயல்பு நிலைக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.