தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாடு என்று நடைபெறும் நிலையில் காலை முதலே வி.சாலைக்கு தொண்டர்கள் திரண்டு வருகிறார்கள். இந்த மாநாடு மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் மாலை 4 மணியளவில் 100 அடி உயர கொடிக்கம்பத்தில் கொடியேற்றும் விஜய் 6 மணிக்கு உரையாற்றுகிறார். இருப்பினும் காலை முதலே விஜயை காணும் ஆர்வத்தில் தொண்டர்களும் ரசிகர்களும் திரண்டு வருகின்றனர். இந்நிலையில் நடிகர் விஜயின் மாநாட்டில் ஒரு முக்கிய எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டுள்ளது. அதில் சில பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மொத்தம் 18 பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதாவது மது அருந்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து செல்ஃபி ஸ்டிக், கண்ணாடி கிளாஸ், வீடியோ, பிளாஷ் போட்டோ, ரிமோட் கண்ட்ரோல் சாதனங்கள், பைக் மற்றும் சைக்கிள், விலங்குகள், பதாகைகள், சட்டவிரோத பொருட்கள், ரேடியோ தொடர்பு சாதனங்கள், ஆயுதங்கள், ஆபத்தான பொருட்கள் மற்றும் வெடிபொருட்கள் போன்றவைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதையெல்லாம் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு நடைபெறும் இடத்தில் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் நடிகர் விஜய் ரசிகர்களை பைக்கில் வரவேண்டாம் என கேட்டுக் கொண்டுள்ளார். அதேபோன்று கர்ப்பிணிகள், குழந்தைகள் மற்றும் வயதானவர்கள் ஆகியவர்களும் மாநாட்டுக்கு வர வேண்டாம் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.