பொதுவாக நாய் கடித்தால் ரேபிஸ் நோய் தொற்று ஏற்பட்டு உயிரிழக்கும் சம்பவங்கள் குறித்த செய்திகளை கேள்விப்பட்டு இருப்போம். பொதுவாக நாய் கடித்தால் உடனடியாக ரேபிஸ் நோய் தடுப்பூசி போட்டுக் கொள்வது அவசியம். இல்லையெனில் நோய் பாதிப்பு அதிகமாகி உயிரையே பறித்து விடும் அபாயம் ஏற்படும். இந்நிலையில் தற்போது பசுவின் பால் குடித்ததால் ஒரு பெண் ரேபிஸ் நோய் தொற்று உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது உத்திரபிரதேச மாநிலம் நொய்டாவில் பசுவின் பாலை ஒரு பெண் காய்ச்சாமல் அப்படியே குடித்துள்ளார். அந்த பசுவுக்கு ரேபிஸ் நோய் தொற்று இருக்கிறது. இதனால் அந்த பாலை காய்ச்சாமல் குடித்ததால் அந்த பெண்ணுக்கும் ரேபிஸ் நோய் தொற்று ஏற்பட்டு உயிரிழந்து விட்டார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பசுவின் பாலை காய்ச்சாமல் குடிப்பது ஆபத்தை விளைவிக்கும் என்பதற்கு இந்த செய்தி ஒரு உதாரணமாக அமைந்துள்ளது