
நம்மில் பலரும் ஹெட் ஃபோன்களை பயன்படுத்திக்கொண்டு பாடல் கேட்பது, படம் பார்ப்பது என நீண்ட நேரம் பயன்படுத்துவதை பழக்கமாக வைத்திருப்போம். காதில் மாட்டிக்கொண்டே பாட்டை கேட்டுக்கொண்டே இருப்பது வழக்கம். இந்நிலையில் சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே ப்ளூடூத் ஹெட் போன் போட்டுகொண்டு நீண்ட நேரம் பாட்டு கேட்டு கொண்டிருந்த போது அது வெடித்து சிதறியுள்ளது.
இதில் சிவகங்கை மாத்துக்கமாயை கிராமத்தை சேர்ந்த பன்னீர்செல்வம் என்பவருக்கு காதில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து பன்னீர்செல்வம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.