பஹ்ரைச் கிராமத்தில் ஓநாய் தாக்குதல்: எட்டு குழந்தைகள் உட்பட ஒன்பது பேர் பலி

உத்திரப் பிரதேசத்தின் பஹ்ரைச்  கிராமத்தில் ஓநாய்கள் கூட்டமாக புகுந்து தொடர்ச்சியாக தாக்குதல் நடத்தியதில் எட்டு குழந்தைகள் உட்பட ஒன்பது பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். கடந்த 45 நாட்களில் இந்த தாக்குதல்கள் தொடர்ந்து நடைபெற்று வந்துள்ளது.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. ஓநாய்களை விரட்ட கிராம மக்கள் பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டு வந்தாலும் எந்த பயனும் இல்லாமல் போனது. இதையடுத்து, பாஜக எம்எல்ஏ ஒருவர் தனது ஆதரவாளர்களுடன் இணைந்து கையில்  துப்பாக்கியுடன் இரவில் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளார்.