தமிழக வெற்றி கழகத்தின் ஆண்டுவிழா மற்றும் இரண்டாம் ஆண்டு துவக்க விழா நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் அந்த கட்சியின் தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, சினிமா துறையில் உச்சத்தில் இருந்த போதே அதனை துறந்து அரசியலுக்கு விஜய் வந்துள்ளார். தளபதி என்ற நிலையிலிருந்து தலைவர் என்ற நிலைக்கு அவர் உயர்ந்துள்ளார். ஆளுங்கட்சிக்கு தூக்கத்தில் கூட இந்த கூட்டத்தை எப்படி அடக்குவது என்ற எண்ணம் தான் இருக்கிறது.

தமிழக அரசியல் கட்சிக்கு ஒரே மாற்று தவெக. ஒரே மாற்று தலைவர் விஜய். ஜாதி அரசியலைப் பேசி வெற்றி பெற்று ஊழலை முதல் கண்ணாக கொண்டுள்ளனர். பெரியாரை முன்னிலைப்படுத்தி இன்றைய அரசியல் ஊழல்வாதிகளின் கையில் இருக்கிறது. 100 வருடங்கள் ஆகியும் பெரியாரின் கனவுகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை. 75 வருடங்களாக கொள்கை பேசிய தலைவர்கள் என்ன மாற்றத்தை செய்தார்கள். தமிழ்நாட்டின் கடன் 9 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. 15 வருடங்களாக 5 கோடி கடன் வாங்கிய கட்சி அதிமுக. சினிமா துறையில் பல தொழில்களை நடத்தும் அரசாக இன்றைய அரசு இருக்கிறது. ஆனால் என் தலைவரை பார்த்து நடிகர் என்கிறார்கள். என் தலைவர் முன்பாக தான் அவர்கள் நடிக்கிறார்கள். என்று கூறினார்.