
தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் ஊழலை ஒழிக்க வேண்டும் என்றும் குடும்ப அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு அதாவது வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார். அதன் பிறகு தமிழ்நாட்டில் ஊழல் இல்லாத ஆட்சியை உருவாக்க அனைவரும் சேர்ந்து பாடுபடுவோம் என்று கட்சியினருக்கு அவர் அறிவுறுத்தி இருந்தார். திமுகவுக்கு எதிராக சில தீர்மானங்களையும் விஜய் சமீபத்தில் நடந்த செயற்குழு கூட்டத்தின் போது நிறைவேற்றினார்.
அதாவது தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு விட்டதாகவும், மதுக்கடைகள் மூலம் வருமானத்தை பெருக்கி வருவதாகவும், மாதம் ஒருமுறை மின்கட்டணம் வசூலிக்கப்படும் என்று கூறிவிட்டு இதுவரை அந்த கட்டணத்தை செயல்படுத்தாமல் இருப்பது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களுக்கு திமுக அரசின் மீது கண்டனம் தெரிவித்து தமிழக வெற்றி கழகம் தீர்மானம் நிறைவேற்றியது. இந்நிலையில் நேற்று நடந்த ஒரு நிகழ்ச்சியின் போது முதல்வர் ஸ்டாலின் சிறிது புதிதாக கட்சி தொடங்குபவர்கள் எல்லாம் திமுகவை ஒழிக்க வேண்டும் என்று கூறுகிறார்கள்.
இவர்களுக்கெல்லாம் பதில் சொல்லி நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை என்று கூறியுள்ளார். இதனை தற்போது தமிழக வெற்றிக்கழகத்தின் ஆதரவாளர்கள் இணையதளத்தில் வீடியோவோடு வெளியிட்டு டிரெண்டாக்கி வருகிறார்கள். அதாவது நடிகர் விஜய் ஊழலை ஒழிக்க வேண்டும் என்று பேசிய வீடியோவையும் முதல்வர் ஸ்டாலின் புதிதாக கட்சி தொடங்குபவர்கள் எல்லாம் திமுக ஒழிக்க வேண்டும் என்று கூறுகிறார்கள் என்று கூறியதையும் வீடியோவாக வெளியிட்டுள்ளனர். மேலும் ஊழலை ஒழிக்க வேண்டும் என்று விஜய் கூறிய நிலையில் திமுகவை ஒழிக்க தான் அவர் கட்சி தொடங்கியதாக முதல்வர் கூறியதால் நீங்களே உங்கள் தவறை ஒப்புக் கொள்கிறீர்களா என்ற படி வார்த்தை ஜாலம் செய்து அந்த வீடியோவை இணையத்தில் மிகவும் வைரல் ஆக்கி வருகிறார்கள்.
தலைவர் விஜய்: ஊழலை ஒழிக்க வேண்டும்🔥..
ஸ்டாலின்:- வரவன் போறவன்லாம் திமுகவை ஒழிக்கவே பார்கிறார்கள்..😂 pic.twitter.com/EJnfHRQ7uG
— TVK Vijay Trends (@TVKVijayTrends) November 4, 2024