
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே திருச்சிற்றம்பலம் அருகே உள்ள புனல் வாசல் கிழக்கு ராமகிருஷ்ணாபுரம் வாடிகாடு கிராமத்தில் 2,500 பேர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியை சேர்ந்த மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் நகர பதிவுகளுக்கு செல்லும் பேருந்துகளில் ஏறுவதற்கு இரண்டரை கிலோ மீட்டர் தூரம் நடந்து செல்ல வேண்டி இருக்கிறது.
அதனால் கீழ்புனல்வாசலில் இருந்து புனல் வாசல் வழியாக வாடிக்காடு, வலசக்காடு, துறவி காடு, திருச்சிற்றம்பலம் மேலபுலன்வாசல், பிளாங்குடியிருப்பு, செருவா விடுதி வடக்கு, ஈச்சன்விடுதி, மடத்திக்காடு, உப்பு விடுதி, திருச்சிற்றம்பலம் வழித்தடத்தில் புதிதாக பேருந்துகள் இயக்கப்பட வேண்டும் என இந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்தியுள்ளனர். மேலும் தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு கிராம மக்கள் கோரிக்கை மனு அனுப்பி உள்ளனர்.