விழுப்புரம் மாவட்டம் பணியபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் பாலாஜி. இந்த மாணவன் பகுதியில் இருக்கும் பள்ளியில் படித்து வந்தார். இவர் நேற்று ஊரில் உள்ள கிணற்றில் குளிக்க சென்றுள்ளார். நீச்சல் தெரியாத காரணத்தால் பாலாஜி நீரில் தத்தளித்து மூழ்கி உயிரிழந்தார்.

இது குறித்து அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று தண்ணீரில் மூழ்கிய பாலாஜியின் உடலை சடலமாக மீட்டனர். இதனை அடுத்து போலீசார் பாலாஜியின் உடலை பிரேத பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.