புதுக்கோட்டை மாவட்டம் அடப்பன்வயயில் பள்ளிவாசலில் நேற்று தொழுகை நடைபெற்றது. அப்போது சையது இப்ராஹிம் ஷா என்பவர் தொழுகையில் ஈடுபட்டார். அப்போது திடீரென அவர் மயங்கி விழுந்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் இப்ராஹிமை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் இப்ராஹிம் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். அவரது உடல் அஞ்சலிக்காக வீட்டில் வைக்கப்பட்டு இருந்தது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான சிசிடிவி காட்சிகளும் சோஷியல் மீடியாவில் வேகமாக பரவி வருகிறது.