சேலம் மாவட்டம் ராமகவுண்டனூர் என்னும் பகுதியில் லோகநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அந்த பகுதியில் வேற்றுகிரகவாசி போல் உருவம் ஒன்று அமைத்து கோவில் கட்டி வழிபட்டு வருகிறார். இந்நிலையில் இந்த உருவத்தை அவர் ஏலியன் சித்தர் என்று கூறியுள்ளார். இந்த கோவில் ஏலியன் சித்தர் கைலாய சிவன் கோயில் என்று அழைக்கப்படுகிறது. இந்த கோவிலுக்கு தினந்தோறும் பக்தர்கள் வருகை பிரிகிறார்கள்.

இந்த கோவிலை கட்டும் பணி கடந்த 2021 ம் ஆண்டிலிருந்து நடைபெற்று வருகிறது. இந்த கோவிலில் குருநாதர் சித்தரின் ஜீவசமாதி அருகே ஏலியன் சித்தர் மற்றும் அகத்திய முனிவர் சிலைகள் வைக்கப்பட்டு இருக்கிறது. இது குறித்து லோகநாதனிடம் கேட்டபோது ஏலியன் சித்தர் எந்த ஊரிலும் இல்லை இங்கு தான் அமைந்திருக்கிறது என்று அவர் தெரிவித்தார். மேலும் அவர் கோவில் பணிகள் நடைபெற்று வருவதால் கும்பாபிஷேகம் முடிந்த பிறகு அனைத்துவித பூஜைகளும் செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.