
டெல்லி ரோகினி பகுதியை சேர்ந்த 16 வயத சிறுவன் தந்தையை கொலை செய்த குற்றத்திற்காக காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளான். கொலை செய்யப்பட்ட நபர் அடிக்கடி மனைவி மற்றும் மகனை கடுமையாக தாக்குவதை வாடிக்கையா வைத்துள்ளார். இதனால் சிறுவன் தந்தையின் மீது ஏற்கனவே வெறுப்பில் இருந்துள்ளான்.
இந்நிலையில் சம்பவத்தன்று தனது தாயிடம் தந்தை கடுமையாக நடப்பதை சிறுவன் தடுத்துள்ளான். இதில் ஒரு கட்டத்தில் சிறுவன் பிளாஸ்டிக் பைப் கொண்டு தனது தந்தையின் தலையில் அடிக்க சம்பவ இடத்திலேயே அந்த நபர் உயிரிழந்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சிறுவனை கைது செய்துள்ளனர்.