தமிழக வெற்றி கழகம் என்ற புதிய அரசியல் கட்சியினை நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கிய நிலையில் அவருடைய கட்சிக்கு இந்திய தேர்தல் ஆணையம் அங்கீகாரம் வழங்கிய நிலையில் கடந்த மாதம் முதல் மாநாட்டினை நடத்தி முடித்தார். அதன் பிறகு சென்னை பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் தமிழக வெற்றி கழகத்தின் செயற்குழு கூட்டம் நடைபெற்ற நிலையில் நேற்று விவசாயிகளை கௌரவப்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

அதாவது தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநாடு நடைபெற இடம் கொடுத்த விவசாயிகளை கௌரவப்படுத்தும் விதமாக அவர்களுக்கு விருந்து கொடுத்த விஜய் பரிசு பொருட்களையும் வழங்கினார். இந்நிலையில் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த சில இளைஞர்கள் எங்கள் அனைவரிடமும் தற்போது வாக்காளர் அடையாள அட்டை வந்துவிட்டது. நாங்கள் அனைவரும் நடிகர் விஜய்க்கு தான் ஓட்டு போடுவோம். 2026 இல் நம்மதான் கண்டிப்பாக் வருவோம் என்று கூறுகிறார்கள். மேலும் இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.