இஸ்ரேல் மற்றும் கமாஸ் இடையே மோதல் ஏற்பட்ட நிலையில் ஈரானில் செயல்பட்டு வரும் ஹிஸ்புல்லா அமைப்பும் ஹமாஸ் அமைப்புக்கு ஆதரவு கொடுப்பதால் இஸ்ரேல் லெபனான் மீதும் தாக்குதல் நடத்தி வருகிறது. காசா மீதான தாக்குதலில் ஏராளமான பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்ட நிலையில் லெபனான் மீதும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. அதன் பிறகு ஈரான் மீதும் சமீபத்தில் இஸ்ரேல் பயங்கர தாக்குதல்களை நடத்திய நிலையில் ஈரான் பதிலடி கொடுக்கும் விதமாக மீண்டும் தாக்குதல் நடத்தக்கூடாது என்று அமெரிக்கா எச்சரித்திருந்தது. அந்த அமைப்பின் தலைவர் நசன் ஹசரல்லா கொல்லப்பட்ட நிலையில் தற்போது அந்த இயக்கத்தின் தளபதிகளும் கொல்லப்பட்டனர்.

இந்நிலையில் தற்போது ஹிஸ்புல்லா அமைப்பின் புதிய தலைவர் அறிவிக்கப்பட்டுள்ளார். அதன்படி அந்த அமைப்பின் புதிய தலைவராக ஷேக் நயீம் காசிம் புதிய தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். மேலும் லெபனான் மீது நடத்திய தாக்குதலில் இதுவரை 1500 க்கும் மேற்பட்டவர் பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும். முன்னதாக ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர்கள் எத்தனை பேர் வந்தாலும் அவர்கள் அனைவரையும் கொல்வோம் என்று இஸ்ரேல் எச்சரித்திறந்த நிலையில் தற்போது புதிய தலைவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.