
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் சென்றுகொண்டிருந்த தனியார் பேருந்தில் பயணம் செய்த் நபர் ஒருவர், ஜன்னல் வழியாக எச்சில் துப்பியுள்ளார். அது அந்த வழியாக பைக்கில் சென்றவர்கள் மீது தெறித்துள்ளது. இதனால் கடும் கோவத்திற்கு உள்ளான பைக்கில் சென்ற நபர்கள் பேருந்தை வழிமறித்துள்ளனர்.
பின்னர் பேருந்திலிருந்து எச்சில் துப்பியது யார் என்று கேட்டு தகராறில் ஈடுபட்டதால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. அரை மணி நேரத்திற்கும் மேலாக வாக்குவாதம் தொடர்ந்துள்ளது. இதனையடுத்து போலீசார் வந்து இளைஞர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.