
தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் சோனு சூட். இவர் தமிழிலும் பல படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் உத்திரபிரதேச மாநிலத்தில் கான்வர் புனித யாத்திரை செல்லும் பகுதிகளில் பல உணவகங்கள் அமைந்துள்ளது. இங்குள்ள அனைத்து உணவகங்களின் முகத்திலும் உரிமையாளர்கள் தங்களின் பெயர்களை கண்டிப்பாக காண்பிக்க வேண்டும் என உபி முதல்வர் அறிவித்துள்ளார். இதற்கிடையில் சண்டிகரில் உள்ள ஒரு உணவகத்தில் ஒருவர் எச்சிலை உமிழ்ந்து ரொட்டி தயாரித்தது தொடர்பான ஒரு வீடியோ வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் அந்த வீடியோவிற்கு நடிகர் சோனு சூட் ஆதரவு தெரிவிக்கும் விதமாக கருத்து தெரிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அதாவது இந்த சம்பவத்தை ராமாயண தொடரில் சபரி ராமனுக்கு எச்சில் செய்த பழங்களை வழங்கிய போது அதை ராமன் சாப்பிட்டார். அப்படி பகவான் ஸ்ரீ ராமரே சாப்பிடும்போது எச்சில் உமிழ்ந்த ரொட்டியை நம்மால் ஏன் சாப்பிட முடியாது என்பது போல அவர் பதிவிட்டுள்ளார். இதனை பலரும் விமர்சித்த நிலையில் நடிகர் சோனு சூட் தான் பதிவிட்ட கருத்துக்கு விளக்கம் அளித்துள்ளார். அதாவது இது போன்ற குற்றங்களில் ஈடுபடுபவர்களை நிச்சயம் மன்னிக்க முடியாது. அவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும். இருப்பினும் மறுபக்கம் மனிதாபிமானம் என்பது மனிதாபிமானமாகவே இருக்கட்டும். மேலும் எந்த மாநிலமாக இருந்தாலும் சரி எந்த மதத்தை சார்ந்தவராக இருந்தாலும் சரி உங்களுக்கு ஏதேனும் உதவி தேவைப்பட்டால் உடனடியாக என்னிடம் தெரியப்படுத்துங்கள் என்ற பதிவிட்டுள்ளார்.
थूक लगाई रोटी “सोनू सूद” को “पार्सल” की जाये, ताकि भाईचारा बना रहे ! https://t.co/e3mghsFgkG pic.twitter.com/ANcE6yquTJ
— Sudhir Mishra 🇮🇳 (@Sudhir_mish) July 19, 2024