தமிழகத்தில் அதிமுக மற்றும் பாஜக கூட்டணியில் இருந்த நிலையில் கடந்த நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக கூட்டணி முறிவடைந்தது. அதாவது பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை அதிமுகவின் தலைவர்கள் மற்றும் மறைந்த தலைவர்களை பற்றி தொடர்ந்து அவதூறாக பேசுவதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் பின்னர் அதிமுக பாஜகவுடன் கூட்டணியை முறித்துக் கொள்வதாக அறிவித்தது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தனியாக போட்டியிட்ட நிலையில் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை. அடுத்து வரும் 2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் மீண்டும் அதிமுக மற்றும் பாஜக கூட்டணி அமைக்க இருப்பதாக கூறப்படும் நிலையில் தேர்தல் நேரத்தில் அறிவிப்புகள் வெளியாகலாம் என்று கூறப்படுகிறது.

பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை அதிமுகவுடன் தனக்கு தனிப்பட்ட முறையில் எந்த பிரச்சனையும் இல்லை எனவும் கூட்டணி தொடர்பாக மேலிடம் முடிவு செய்யும் எனவும் கூறியிருந்தார். ஆனால் அதிமுக கட்சியின் தலைவர்கள் பாஜகவுடன் கூட்டணி கிடையாது என்று கூறி வருகிறார்கள். இந்நிலையில் என்ற செய்தியாளர்களை சந்தித்த நயினார் நாகேந்திரன் அதிமுகவுடன் கூட்டணி அமைப்பது பற்றி பேசியுள்ளார். அதாவது எடப்பாடி பழனிச்சாமியுடன் பாஜகவினர் அமர்ந்து பேசினாலே கூட்டணி அமைந்துவிடும். மேலும் இதற்காக அதிமுகவினரை மிரட்டி ரெய்டு அனுப்பி கூட்டணி வைக்க வேண்டிய அவசியம் எங்களுக்கு கிடையாது என்று கூறியுள்ளார். இதன் மூலம் அதிமுகவும் பாஜகவும் மீண்டும் கூட்டணி அமைக்க இருப்பதாக கூறப்படுகிறது.