சமீபத்தில் பயனர் ஒருவர் எக்ஸ் தளத்தில் எலான் மஸ்க்கிடம் எண்ணங்களின் மூலமாக உங்களுடைய போனை கட்டுப்படுத்த, அனுமதிக்க உங்கள் மூளையில் நியூராலிங்க் பொருத்துவீர்களா? என்று கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு மஸ்க் அளித்த பதிலில், எதிர்காலத்தில் செல்போன்களே இருக்காது. நியூராலிங் மட்டுமே இருக்கும் என்று கூறியிருக்கிறார். 2016 ஆம் வருடம் எலான் மஸ்க் தொடங்கிய நியூராலிங்க் நிறுவனம் மனித மூளைக்கும், கணினிக்கும் இடையான இணைப்பை உருவாக்கும் வகையிலான சிப்புகளை மனித மூளையில் பொருத்தி சோதனை மேற்கொண்டு வருகிறது.

கடந்த சில வருடங்களுக்கு முன்பாக குரங்குகளை வைத்து இந்த சோதனையை இந்நிறுவனம் செய்திருந்தது. தற்போது மனிதர்களுக்கு அதை பொருத்தி சோதனை நடத்தி வருகிறது. இதற்கு ஆர்வம் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெற்று அதில் தேர்வு செய்யப்படும் இரண்டாவது நபருக்கு நியூராலின் சிப் மூளையில் பொருத்தப்பட்டு விட்டால் இரண்டு பேரும் செல்போன் உதவி இல்லாமல் ஒருவருக்கொருவர் தகவல்களை பரிமாறிக் கொள்ள முடியும் என்று கூறப்படுகிறது. இது வெற்றியடையுமானால் 2050 ஆம் வருடத்தில் செல்போன் என்ற கருவி இல்லாமல் போகும் சாத்தியம் இருப்பதாக கூறப்படுகிறது.