பிரபல சரவணா ஸ்டோர்ஸ் கடையின் உரிமையாளர் லெஜெண்ட் சரவணன். இவர் கடந்த 2022 ஆம் ஆண்டு தி லெஜெண்ட் என்ற படத்தின் மூலம் திரையுலகில் கதாநாயகனாக அறிமுகமானார். இந்த படத்திற்கு பிறகு தற்போது மீண்டும் ஒரு புதிய படத்தில் லெஜன்ட் சரவணன் நடிக்க இருக்கிறார். இந்த படத்தை இயக்குனர் துரை செந்தில்குமார் இயக்க இருக்கிறார்.

இவர் கொடி, காக்கி சட்டை மற்றும் கருடன் போன்ற வெற்றி படங்களை இயக்கியவர். இந்த படத்திற்காண பூஜை நடைபெற்ற நிலையில் புகைப்படங்களை துரை செந்தில்குமார் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும் தற்போது திரையுலகில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் கருடன் பட இயக்குனருடன் லெஜென் சரவணன் இணைந்தது ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்திய நிலையில் அவருக்கு இது ஒரு வெற்றி படமாக அமையலாம் என்றும் கூறப்படுகிறது.