இன்றைய காலகட்டத்தில் சமூக வலைத்தளங்களில் தினம்தோறும் புதுவிதமான வீடியோக்கள் வைரலாகி வருகிறது. என்ன செய்தாலும் அதனை சமூக வலைத்தளங்களில் பலரும் வீடியோவாக பதிவிடுகின்றனர். இப்படி பகிரப்படும் சில வீடியோக்கள் பார்ப்பதற்கு வேடிக்கையாகவும் வியப்பாகவும் இருக்கும். அதன்படி இளம் பெண் ஒருவர் உணவகம் ஒன்றில் குடும்பத்தினருடன் அமர்ந்திருக்கின்றார். அப்போது தன்னுடைய செல்போனால் யாரோ ஒருவருக்கு மெசேஜ் அனுப்புகின்றார்.

இவர் அனுப்பியதை கூறியதும் பக்கத்தில் இருப்பவர்கள் கைதட்டி அதனை கொண்டாடுகிறார்கள். இந்த வீடியோவில் பிரேக் அப் மெசேஜ் என்று அந்த பெண் குறிப்பிட்டுள்ளார். அதாவது இவர் ஒருவரோடு உறவை முறித்துக் கொண்டதற்காக இவ்வளவு பெரிய கொண்டாட்டம் வைத்துள்ளார். பொதுவாகவே இப்படியான நேரத்தில் மீட்க முடியாத சோகத்தில் இருப்பார்கள். ஆனால் தற்போது வெளியாகி உள்ள வீடியோவில் உள்ள குடும்பம் இதனை வரவேற்று உள்ளது. தற்போது இந்த வீடியோ வெளியாகி பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.