
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பல திரைப்படங்களில் நடித்த ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்தான் நடிகை ரகுல் ப்ரீத் சிங். தமிழிலும் ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ள இவருக்கு கடந்த பிப்ரவரி மாதம் தான் திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில் இன்ஸ்டாகிராமில் என்னிடம் எது பற்றி வேண்டுமானாலும் கேளுங்கள் என்ற பெயரில் நிகழ்ச்சி ஒன்றை அவர் நடத்தினார்.
அதில், அவரிடம் ரசிகர்கள் பல கேள்விகளை கேட்டனர். இவருடைய தனிப்பட்ட வாழ்க்கை பற்றிய கேள்விமுறை வந்தபோது ஒரு ரசிகர் ஆர்வத்தில், திருமணம் பற்றிய உங்களுடைய திட்டம் என்ன? எப்போது உங்களுக்கு திருமணம் நடக்கும் என்று கேட்டார். இதனைக் கேட்டு ஆச்சரியமடைந்த நடிகை, அது முன்பே நடந்து விட்டது. என்னை எத்தனை முறை அதனை செய்ய வைப்பீர்கள் என்று சற்று ஆவேசமாக கேட்டுள்ளார்.