
சென்னையில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் நடிகரும் பேச்சாளருமான திண்டுக்கல் ஐ லியோனி நடிகர் விஜயை கடுமையாக விமர்சித்துள்ளார். இதற்கு முன்பு ஏற்கனவே திமுகவுக்கு ஆதரவு கொடுத்து நடிகர் விஜயை விமர்சித்திருந்தார். அதாவது உதயநிதி சர்வதேச அளவில் சிக்சர் அடிப்பவர் என்றும், லப்பர் பந்தில் சிக்சர் அடிக்கும் டுபாக்கூரா ல் அவரை நெருங்க கூட முடியாது என்றும், 2 வருடங்களில் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்று கூறினால் பேய் பிடித்திருக்கு என்று பலரும் நினைப்பார்கள் என்றும் விஜய்யை மறைமுகமாக விமர்சித்தார்.
இந்நிலையில் இன்று நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட திண்டுக்கல் ஐ லியோனி பேசியதாவது, உலகமே பாராட்டக்கூடிய இளம் தலைவராக உதயநிதி ஸ்டாலின் செயல்பட்டு வருகிறார். முதல் மாநாட்டில் ஓடி வந்த விஜயை நோக்கி துண்டுகளை வீசிய நிலையில் அதை அவர் கழுத்தில் எடுத்து போட்டுக் கொண்டார். பின்னர் அதே துண்டுகளை அவர் கூட்டத்தை நோக்கி வீசிய நிலையில் சில துண்டுகள் காலில் மிதிபட்டது. இதைக்கூட கவனிக்கவில்லை. இதெல்லாம் ஒரு மாநாடா. அந்த டுபாக்கூர் பொம்மை கோட்டைக்குள் போவதற்கு 800 மீட்டர் ஓட வேண்டி இருந்தது.
அப்படியெனில் சார்ஜ் கோட்டையை பிடிப்பதற்கு இன்னும் எத்தனை தூரம் ஓட வேண்டும் ப்ரோ என்றார். திமுக என்ற ஆலமரத்தை அறுப்பதற்கு வந்த 21 வது பிளேடு தான் நீங்கள். இதற்கு முன்பு 20 பிளேடுகள் வந்த நிலையில் அதில் 4 பிளேடுகள் துருப்பிடித்து கிடக்கிறது. சில பிளேடுகள் எதற்கு வந்தோம் என்று கூட தெரியாமல் அனாதையாக கிடக்கிறது. திமுக என்ற ஆலமரத்தை அறுக்க வந்த 21 வது பிளேடு தான் தம்பி விஜய். எந்த கொம்பனாலும் திமுக என்ற ஆலமரத்தை அசைத்துக் கூட பார்க்க முடியாது என்று கூறினார். மேலும் திண்டுக்கல் ஐ லியோனி இப்படி விஜயை விமர்சித்துள்ளது தமிழக வெற்றி கழகத்தினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.