நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவரிடம் நேற்று நடைபெற்ற அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழா குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அவர் கூறியதாவது, அம்பேத்கர் புத்தகம் வெளியீட்டு விழாவிற்கு என்னையும் அழைத்தார்கள். விசிக தலைவர் திருமாவளவன் அந்த புத்தகத்தை வெளியிட நான் அதனை பெற்றிருந்தால் சரியாக இருந்திருக்கும்.

அம்பேத்கரை பற்றி இந்த தலைமுறைப் பிள்ளைகள் அறிந்து கொள்ளும் விதத்தில் எவ்வாறு அவர்களிடம் சென்றாலும் அதை ஏற்றுக் கொண்டு வரவேற்கணும். அந்த வகையில் தம்பி விஜய் அம்பேத்கர் புத்தகத்தை வெளியிடுவதை நான் வரவேற்கிறேன். அந்த நூல் வெளியீட்டு விழாவிற்கு எனக்கு அழைப்பு வந்தது. ஆனால் முதலில் ஸ்டாலின் மற்றும் ராகுல் காந்தி ஆகியோர்கள் வருவதாக கூறப்பட்டதால் எனக்கு அது சரியில்லை என்று பட்டது. அம்பேத்கரைப் பற்றி புதிதாக பேசுவதற்கு எனக்கு யாரும் மேடை தர வேண்டாம். மேலும் ஒவ்வொரு மேடையும் அவரைப் பற்றி நான் பேசும் இடம் தான் என்று கூறினார்.