
ஐபிஎல் தொடரின் 20வது லீக் ஆட்டத்தில் மும்பை – பெங்களூர் அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணியானது பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி ஆர்சிபி அணியின் தொடக்க வீரர்களான விராட் கோலி, பில் சால்ட் களமிறங்கினார்கள், இதில் சால்ட் 4 ரன்னில் ஆட்டம் இழந்தார். விராட் மற்றும் படிக்கல் ஜோடி சேர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். இறுதியில் மும்பை அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழந்து 209 ரன்கள் எடுத்தது. இதன் மூலமாக மும்பைக்கு எதிரான போட்டியில் 12 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூர் அணி வெற்றி பெற்றது. இந்த போட்டியில் ரஜப் படிதாருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.
இந்த நிலையில் ஆட்டத்தில் வெற்றி பெற்ற பிறகு பெங்களூர் வீரர் க்ருனால் பாண்டியா அளித்த பேட்டியில், “எனக்கும் ஹர்திக் பாண்டியாவிற்கும் உள்ள பந்தம் மிகப்பெரியது. இருந்தாலும் இந்த போட்டியில் ஒரே ஒரு பாண்டியா அணி மட்டுமே வெற்றி பெற முடியும் என்பது எங்களுக்கு தெரியும். நாங்கள் ஒருவருக்கொருவர் வைத்திருக்கும் அன்பு பாசமும் இயல்பானது. ஹர்திக் பாண்டியா உண்மையிலேயே நன்றாக பேட்டிங் செய்தார். ஆனால் எங்களுடைய அணி வெற்றி பெற்றது மிகவும் சிறப்பானது. 100 சதவீதம் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த நினைப்பீர்கள். மேலும் எங்களுடைய அணி வீரர்களுக்கு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். லக்னோ அணியில் ஆன்ட்டி பிளவர் உடன் ஏற்கனவே எனக்கு நல்ல அனுபவம் உள்ளது. எனவே அந்த தொடரை நன்றாக எடுத்துச் செல்ல உதவியது” என்று கூறியுள்ளார்.