அரியவகை நோயால் அவதிப்படுவதாக நடிகர் கமல்ஹாசனின் மகளும் நடிகையுமான ஸ்ருதிஹாசன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், நான் பி சி ஓ எஸ் என்ற அரியவகை நோயால் அவதிப்படுகின்றேன். இதனால் மாதவிடாய் பிரச்சனை ஏற்பட்டு வேலைகளை சரியாக செய்ய முடியவில்லை.

கோடிக்கணக்கான ரூபாயை முதலீடு செய்து படம் எடுக்கும் தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்களிடம் எனக்கு இருக்கும் பிரச்சனையை சொல்லி படப்பிடிப்பை மற்றொரு நாளில் வைத்துக் கொள்ளுங்கள் என்று சொல்ல முடியாது. அனைத்து வேதனையையும் பொறுத்துக் கொண்டு படங்களில் சண்டைக் காட்சி ஆனாலும் பாடல் காட்சிகளானாலும் சிரித்த படி நடித்து வருகிறேன் என்று உருக்கமாக பேசியுள்ளார்.