அலிகார் மாவட்டத்தில் தன் மகளுக்கு பார்த்த மாப்பிள்ளையோடு தாயார் ஓடிப்போன சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்த நிலையில் இது தொடர்பாக அந்த பெண்ணின் கணவர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்திருந்தார். அதாவது திருமணத்திற்கு 10 நாட்கள் மட்டுமே இருந்த நிலையில் தன் மகளின் மாப்பிள்ளையோடு தாயார் ஓடிப்போன நிலையில் வீட்டிலிருந்த நகை மற்றும் பணம் போன்றவற்றையும் எடுத்து சென்று விட்டார். அதாவது மகளின் திருமணத்திற்காக சேர்த்து வைத்த பணம் நகை போன்றவற்றை அவர் எடுத்துக் கொண்டு சென்று விட்டார். மகளை விட மாமியார் அழகாக இருந்ததால் மருமகனுக்கு ஆசை வர செல்போனில் இருவரும் காதலை வளர்த்து பின்னர் ஓடிப்போன நிலையில் தற்போது போலீஸ் ஸ்டேஷனில் ஓடிப்போன சப்னாவும் அந்த மாப்பிள்ளையும் சரணடைந்துள்ளனர்.

அவர் எனக்கு மாப்பிள்ளை தான் வேண்டும் எனவும் என் கணவர் மது குடித்துவிட்டு துன்புறுத்துவதோடு மகளும் அவருடன் சேர்ந்து அடித்து டார்ச்சர் செய்ததாகவும் கூறியுள்ளார். அதோடு என்ன ஆனாலும் பரவாயில்லை ராகுல் குமாரோடு தான் வாழ்வேன் என்று அவர் பிடிவாதமாக கூறிவிட்டார். இது பற்றி ராகுல் கூறும் போது சப்னா தற்கொலை செய்து கொள்வதாக கூறியதால் தான் ஓடிப்போனதாகவும் இன்னும் திருமணம் எதுவும் செய்யவில்லை என்றும் கூறினார். இந்நிலையில் சப்னாவை தங்களுக்கு வேண்டாம் என்றும் அவர்கள் இருவரும் எப்படி போனாலும் கவலை இல்லை என்றும் கூறிய குடும்பத்தினர் பணம் மற்றும் நகையை மட்டும் கொடுக்குமாறு கூறினார்.

 

அதாவது 5 லட்சம் மதிப்பிலான தங்க நகைகள் மற்றும் 3.5 லட்சம் ரொக்க பணம் ஆகியவற்றை சப்னா எடுத்துச் சென்றதாகவும் அதை மட்டும் மீட்டு தருமாறும் அவரின் மகள் கூறியுள்ளார். ஆனால் இதனை சப்னா மறுத்ததோடு செல்போன் மற்றும் 200 ரூபாய் பணம் ஆகியவற்றை மட்டும் தான் வீட்டிலிருந்து எடுத்துச் சென்றதாக கூறியுள்ளார். மேலும் இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வரும் நிலையில் அந்த பெண் கண்ணீரோடு ராகுலோடு வாழ்வேன் என்று கூறிய வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக வருகிறது.