
தமிழ் சினிமாவில் சிகப்பு ரோஜாக்கள் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி இதுவரை 350 க்கும் மேற்பட்ட படங்களிலும் 40 தமிழ் தொலைக்காட்சி தொடர்களிலும் வடிவுக்கரசி நடித்துள்ளார். ஆரம்ப காலத்தில் தொடக்கப் பள்ளிகளில் கற்பித்து வந்த வடிவுக்கரசி சவாலான குடும்ப சூழ்நிலை காரணமாக பல இடங்களில் வேலை செய்தார். அதன் பிறகு சினிமாவிற்குள் வந்து முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இந்த நிலையில் பேட்டி ஒன்றில் பேசிய வடிவுக்கரசி, “எனக்கு கடைசி காலத்தில் ஏதாவது ஆயிடுச்சின்னா என் இறுதி சடங்கு என அனைத்தையும் விஜய் சேதுபதி தான் பண்ண வேண்டும் என்று அவரிடமே கூறினேன்.
அதற்கு விஜய் சேதுபதி ஏமா இப்படி சொல்றீங்க? என்று கேட்டார். தமிழ் சினிமாவுல விஜயகாந்த் அவர்கள் எனக்கு ரொம்ப பிடிக்கும். அவருக்கு அப்புறம் விஜய் சேதுபதி தான் விஜயகாந்த் உடைய ஆத்மாவாக இருக்கிறார் என்று நான் நம்புகிறேன். இப்ப கூட பிக் பாஸ் நிகழ்ச்சி முடிஞ்ச பிறகு அந்த ஒட்டுமொத்தமாக குழுவுக்கும் சுமார் 2000 பேருக்கு மண்டபம் புக் பண்ணி அனைவருக்கும் சாப்பாடு போட்டார் விஜய் சேதுபதி” என்று பேசியுள்ளார்.