உலகப் புகையிலை தினத்தை முன்னிட்டு சமீபத்தில் டெல்லி போலீசார் சமூக ஊடகத்தில் புகையிலை குறித்த விழிப்புணர்வு பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்தனர். ஆனால் சிவம் பரத்வாஜ் என்ற நபர் இதற்கு சம்பந்தம் இல்லாத பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில் அவருக்கு ஒரு காதலியை தேடிப்பிடித்து தர வேண்டும் என கேட்டுக் கொண்டார். அதே சமயம் சிங்கிள் என பதிவிடுவதற்கு பதில் தவறுதலாக சிக்னல் என்று பதிவிட்டுள்ளார். இதனால் டெல்லி போலீசார் நகைச்சுவையான பதிலை அளித்துள்ளனர்.

அதாவது, சார் நாங்கள் காதலியை கண்டுபிடிக்க வேண்டும் என்றால் உங்களுக்கு உதவ முடியும் (அவர் காணாமல் போனால் மட்டுமே) என பதில் அளித்திருந்தனர். இதற்காக ஒருவரை தேடி பிடித்து தர முடியாது என கூறினர். அதேசமயம் அந்த பதிவில் , நீங்கள் சிக்னல் என்றால், நீங்கள் பச்சையாக இருங்கள். சிவப்பாக வேண்டாம் என்று கிண்டல் செய்து பதிவிட்டு இருந்தனர். தற்போது அந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.