மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த வருடம் நவம்பர் மாதம் சட்டசபை தேர்தல் நடைபெற்ற நிலையில் பாஜக கூட்டணி வெற்றி பெற்று தேவேந்திர பாட்னாவிஸ் முதல்வரானார். அதன்பிறகு சிவசேனா பிரிவு ஏக்நாத் ஷிண்டே மற்றும் தேசியவாத காங்கிரஸ் பிரிவு அஜித் பவார் ஆகியோர் துணை முதல்வராக பொறுப்பேற்றனர். இந்நிலையில் அஜித் பவார் பாராமதி என்ற தொகுதியில் வெற்றி பெற்ற நிலையில் சமீபத்தில் தன் தொகுதிக்கு சென்றார்.

அப்போது அவர் சர்ச்சைக்குரிய பேசிய கருத்து சமூக வலைதளத்தில் வைரல் ஆகி வருகிறது. அதாவது நீங்கள் எனக்கு ஓட்டு போட்டதால் முதலாளி ஆகி விட்டீர்களா.? என்னை வாக்காளர்கள் தேர்ந்தெடுத்ததால் அவர்கள் எனக்கு முதலாளி மற்றும் உரிமையாளராகி விட முடியாது. நான் உங்களுக்கு விவசாயக் கூலி கிடையாது என்று கூறினார். மேலும் அவருடைய பேச்சு சர்ச்சையாக மாறிய நிலையில் அது தொடர்பான வீடியோ வைரல் ஆகி வரும் நிலையில் அதற்கு எதிர்க்கட்சிகள் கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள்.