நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான். இவர் நேற்று நடந்த ஒரு பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பல்வேறு விஷயங்கள் பற்றி பேசினார். அவர் பேசியதாவது, நானும் ரஜினிகாந்த்தும் இரண்டரை மணி நேரம் பேசிக் கொண்ட நிலையில் என்ன பேசினோம் என்பதை எனக்கும் சொல்ல வேண்டிய அவசியம் கிடையாது ரஜினிகாந்துக்கும் சொல்ல வேண்டிய அவசியம் கிடையாது.

அவர் திரையுலகின் சூப்பர் ஸ்டார். நான் அரசியல் சூப்பர் ஸ்டார். நாங்கள் இரண்டு பேரும் ஒன்றாக ‌ இருந்ததை பார்த்து அனைவரும் ஐயோ என்று கதறுகிறார்கள். நான் ரஜினிகாந்தை சந்தித்தவுடன் பயந்து போய் சங்கி என்கிறார்கள்.

அதனால் எனக்கு காவி உடை போட பார்க்கிறார்கள். எனக்கு எந்த உடை வேண்டுமானாலும் போடலாம். ஆனால் அது எனக்கு பொருத்தமாக இருக்காது. அதை நான் அசிங்கமானதை வெறுக்கிறேன். காவி உடை Not Fit, Very Ugly Bro என்று கூறினார். நான் மட்டும் இல்லையென்றால் காட்டுப்பள்ளியில் துறைமுகம் மற்றும் 8 வழி சாலை போன்றவைகள் வந்திருக்கும். பரந்தூரில் விமான நிலையத்தை கட்டி முடித்திருப்பார்கள். நானும் என்னுடைய படையும் இருக்கும் வரை இவற்றையெல்லாம் உங்களால் கட்ட முடியுமா. நான் சாத்தியம் இல்லாததை பேசுவேன் என்று கூறுகிறார்கள்.

சாத்தியமில்லாததை சாத்தியப்படுத்துபவன் பெயர்தான் புரட்சியாளன் என்று கூறினார். கங்கைகொண்டம் கடாரம் கொண்டோம் என்று கூறும் நிலையில் காவிரியில் கொஞ்சம் தண்ணீர் எடுத்துக் கொள்ள முடியவில்லை. இது பெரிய அவலம். மன்னராட்சி காலத்தில் நடந்தது தான் தற்போது மக்களாட்சி காலத்திலும் நடக்கிறது. மக்கள் விழித்துக் கொள்ளவில்லை என்றால் இனி இந்த இனத்தை பாதுகாக்க எவனும் வரமாட்டான். நம்மை நோக்கி வரும் விமர்சனங்களை உரமாக்கி நம்முடைய லட்சியத்தை அதில் மரமாக வேண்டும் என்று கூறினார்.