பொதுவாக பள்ளிகளில் ஆசிரியர்கள் ரிஜிஸ்டர் நோட்டில் தங்களது பெயரை பதிவு செய்து கையெழுத்திட்ட பின்னரே பள்ளியறைக்குள் செல்வது வழக்கம். அந்த வகையில் உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியை ரிஜிஸ்டர் நோட்டில் பதிவு செய்ய வந்துள்ளார். அப்போது அதே பள்ளியில் வேலை பார்க்கும் ஆசிரியர் ஒருவர் ரிஜிஸ்டர் நோட்டில் பதிவு செய்ய வேண்டும் என்றால் முத்தம் தருமாறு பெண் ஆசிரியை இடம் கேட்டுள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் ஆசிரியை, அதெல்லாம் தர முடியாது. இதற்கு நான் ஒப்புக்கொள்ள மாட்டேன். இது எல்லாம் மோசமான வேலை என்று கூறியுள்ளார். அதற்கு அந்த ஆசிரியர் சிரித்துக் கொண்டே இருந்துள்ளார். இதனை அருகில் இருந்த மற்றொருவர் தனது செல்போனில் பதிவு செய்துள்ளார். இந்த விடியோவை மம்தா திருப்பதி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.