தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் விஜயசாந்தி. அப்போது அவர் நடிகர்களுக்கு இணையாக சம்பளம் வாங்கப்பட்டார் என்று கூறப்பட்டது. இவர் தமிழ் திரையுலகில் மன்னன் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இவர் நடித்த பல படங்கள் வெற்றி படங்களாக அமைந்த நிலையில் சினிமாவில் வாய்ப்புகள் குறைய தொடங்கிய நிலையில் அடுத்தது அரசியலுக்குள் நுழைந்தார். இவர் முழு நேரமாக அரசியலில் மட்டும் ஈடுபட்டு வரும் நிலையில் சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில் திருமணம் ஆகியும் குழந்தை பெற்றுக்கொள்ளாமல் இருப்பதற்கான காரணத்தை கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் பேட்டியில் கூறியதாவது, திருமணம் ஆகிய எங்களுக்கு பல வருடங்களாக குழந்தைகள் இல்லாத நிலையில் இது பற்றி பலரும் எங்களிடம் கேட்கிறார்கள். நானும் என் கணவரும் குழந்தை வேண்டாம் என்பதால்தான் பெற்றுக் கொள்ளாமல் இருக்கிறோம். அதாவது எனக்கு குழந்தைகள் இருந்தால் அதை வைத்து தெலுங்கானாவில் பிளாக் மெயில் செய்வார்கள் என்ற எண்ணம் எனக்கு வந்தது. இந்த சமயத்தில் அரசியலில் கூட அப்படிப்பட்ட ஒரு மோசமான சூழல் தான் இருந்தது. இது பற்றி நான் என் கணவரிடம் கூறிய போது அவரும் புரிந்து கொண்டார். மேலும் இதுபோன்று தேவையில்லாத விஷயங்களுக்கு இடம் கொடுக்கக் கூடாது என்பதற்காகத்தான் நானும் என் கணவரும் இதுவரை குழந்தை பெற்றுக் கொள்ளவில்லை என்று கூறியுள்ளார்.