
பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் கங்கனா ரணாவத். இவர் இமாச்சல் பிரதேசத்தில் உள்ள மண்டி தொகுதியின் பாஜக எம்.பி ஆவார். இவர் பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருக்கும் நிலையில் எமர்ஜென்சி என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. இந்நிலையில் திருமணம் குறித்த கேள்விக்கு நடிகை கங்கணா ஒரு பேட்டியில் பதில் அளித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது, எனக்கும் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று ஆசையாக இருக்கிறது.
ஒருவரை திருமணம் செய்து குழந்தைகள் பெற்றெடுக்க வேண்டும். நிச்சயம் அனைவருக்கும் ஒரு துணை தேவை. துணை இன்றி வாழ்வது கடினம். அது அவ்வளவு எளிது கிடையாது. தேடி தேடி உங்கள் துணையை கண்டுபிடித்தால் அது நிச்சயம் பேரழிவாக இருக்கும். எனவே நடக்கும் போது அது தானாக நடக்கும் என்று கூறினார். மேலும் நடிகை கங்கனா ரனாவத் இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஒருவரை காதலிப்பதாக கூறிய நிலையில் அவர் யார் என்று இதுவரை தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.