பிரபல தயாரிப்பாளர் போனி கபூர் மற்றும் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர். பாலிவுட் சினிமாவில் வாரிசுகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுவதாக சமீப காலமாகவே சர்ச்சைகள் எழும் நிலையில் அந்த சர்ச்சையில் ஜான்வி கபூரும் சிக்கியுள்ளார். அவருக்கு எதிராக தொடர்ந்து கேள்விகள் மற்றும் விமர்சனங்கள் வலைதளத்தில் வந்து கொண்டிருக்கும் நிலையில் நடிகை ஜான்வி கபூர் இது தொடர்பாக சமீபத்திய பேட்டியில் பேசியுள்ளார்.

அவர் கூறியதாவது, நான் எவ்வளவு தான் உழைத்தாலும் சிலர் வேண்டுமென்றே குறை கூறுகிறார்கள். நான் ஒவ்வொரு படத்திலும் நடிக்கும் போது என்னை ஒரு நடிகையாக மெருகேற்றிக் கொள்கிறேன். இருப்பினும் சிலர் வேண்டுமென்றே குறை சொல்வது மனதை நோகடிக்கிறது. என்னுடைய கெரியர் ஆரம்பித்தவுடன் வாரிசு நடிகை என்று கூறினார்கள். தற்போது சினிமாவில் நடிக்க தெரியாத நீ எல்லாம் எதற்காக நடிக்க வந்தாய் என்று கேலி செய்கிறார்கள். இதை பார்க்கும் போது முதலில் எனக்கு கஷ்டமாக இருந்தது. ஆனால் தற்போது பழகிவிட்டது என்று கூறியுள்ளார்.