பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் டாப்ஸி. இவர் தமிழ் சினிமாவில் ஆடுகளம் படத்தின் மூலம் ஹீரோயின் ஆக அறிமுகமான நிலையில் சில படங்களில் நடித்துள்ளார். அதன்பிறகு தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். தொடர்ந்து ஹிந்தியில் நடித்து வரும் அவர் பேட்மிட்டன் வீரர் மத்தியாஸ் என்பவரை காதலித்து வந்தார். இவர்கள் இருவருக்கும் கடந்த வருடமே திருமணம் நடந்து முடிந்து விட்டதாக தற்போது நடிகை டாப்ஸி கூறியுள்ளார்.

அதாவது தங்களுடைய தனிப்பட்ட வாழ்க்கை முறையை பற்றி வெளியே சொல்ல விரும்பாததால் திருமணத்தை பற்றி அறிவிக்கவில்லை எனவும் அதனால் பலருக்கும் எனக்கு திருமணம் நடந்தது தெரியவில்லை என்றும் கூறியுள்ளார். மேலும் நடிகை டாப்ஸி கடந்த வருடமே தனக்கு திருமணம் நடந்து விட்டதாகவும் அதைப்பற்றி வெளியில் இவ்வளவு நாள் சொல்லவில்லை எனவும் கூறியது அவருடைய ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.