
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் 27ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் நிறைவு பெற்று, தேர்தலில் மொத்தம் 77 பேர் போட்டியிடுகின்றனர். இந்நிலையில் தேர்தலுக்காக பிரச்சாரம் மிக தீவிரமாக நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்நிலையில்முதல்வன் பட பாணியில் தனக்கு ஒருநாள் முதல்வர் பதவியை கொடுத்துப்பாருங்கள் என்று சீமான் கூறியுள்ளார்.
ஈரோட்டில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் போட்டியிடும் மேனகாவுக்காக சீமான் பரப்புரை செய்தார். அப்போது, சீமான் வந்தால் நன்றாக இருக்கும் என்று பேசுகிறார்கள். நானாக வர முடியாது. ஓட்டுப்போட வேண்டும். நாங்கள் ஒரே ஒரு வாக்குப்பெட்டியை நம்பியுள்ளோம். மற்றவர்கள் பணப்பெட்டியை நம்பியுள்ளனர் என்றார்.