தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் கட்சி கொடியை அறிமுகப்படுத்திய நிலையில் பலரும் அவருக்கு நேரடியாக வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். சிலர் அவரது கட்சியில் இணைய போவதாகவும் தங்களது கருத்துக்களை இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில் பிக் பாஸ் பிரபலம் பாலாஜி முருகதாஸ் சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார். அதில், நீங்கள் என்னை மட்டுமல்ல எனது குடும்பத்தையும் சேர்த்து வார்த்தையால் துன்புறுத்துகிறீர்கள். 

இல்லாத என் அம்மாவையும் நீங்கள் விட்டு வைக்கவில்லை. அவர்களையும் நீங்கள் காயப்படுத்துகிறீர்கள். உங்கள் காலடியில் கடந்து வாழ வேண்டும் என நினைக்கிறீர்களா ?  (என்பதை தகாத வார்த்தை ஒன்றின் மூலம் அவர் குறிப்பிட்டு இருந்தார்.)   எனக்கு முதுகெலும்பு இருக்கிறது. நீங்கள் கொடுக்கும் ஒவ்வொரு அடிக்கும் பதிலடி கொடுப்பேன். நான் இப்போதுதான் ஆரம்பிக்கிறேன்.

நான் இந்த ட்ரெண்ட்டை இனி தொடர்வேன் என X தளத்தில் பதிவு செய்துள்ளார். இதற்கு முன்பாக தளபதி விஜய் அவர்களின் கட்சியில் இணைய போவதாக போட்ட பதிவை தொடர்ந்து அவர் அவரை பலரும் விமர்சனம் செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.