
தமிழ் சினிமாவில் மனதோடு மழைக்காலம் என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் சாய் தன்ஷிகா. இந்த படத்திற்கு பிறகு பேராண்மை மற்றும் கபாலி போன்ற சில படங்களில் நடித்துள்ளார். அதோடு மலையாள சினிமாவிலும் இவர் நடித்து வருகிறார். இவர் தற்போது தி ப்ரூப் என்ற திரைப்படத்தில் நடித்துள்ள நிலையில் அப்படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. இந்நிலையில் நடிகை சாய் தன்ஷிகா கிளாமராக நடிப்பது குறித்து ஒரு பேட்டியில் பேசியுள்ளார்.
அவர் பேசியதாவது, எனக்கு முத்த காட்சி மற்றும் படுக்கையறை காட்சி போன்றவைகளில் நடிப்பதில் உடன்பாடு கிடையாது. நான் பொதுவாக கிளாமர் காட்சிகளில் நடிக்க மாட்டேன். ஏனெனில் எனக்கு கிளாமர் செட்டாகாது. சிலர் அதை அழகாக காட்டுவார்கள். ஆனால் சிலர் அதை வலுக்கட்டாயமாக திணிப்பார்கள். அதே சமயத்தில் தி ப்ரூப் படத்தில் அழகான கிளாமர் என்பதால் அதில் நடித்துள்ளேன். மேலும் எனக்கு நடிகர் தனுஷ் மற்றும் நடிகை சாய் பல்லவி ஆகியோர்களை மிகவும் பிடிக்கும் என்று கூறியுள்ளார்.