தாய்லாந்து நாட்டில் Chiang Mai Breakfast World என்ற உணவகத்தில் வித்தியாசமான தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது வாடிக்கையாளர்கள் இரும்பு கம்பிகளுக்குள் நுழைந்து சென்று தங்களால் தாண்ட முடிந்த அளவை அடிப்படையாகக் கொண்டு தள்ளுபடி வழங்கப்படும் என்று புதிய அறிவிப்பானது அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் உடல் அளவில் உடல் எடை குறைவாக இருப்பவர்கள் அந்த மெல்லிய இடைவெளிக்குள் நுழைய முடியும் என்பதால் அவர்களுக்கு அதிகபட்சமாக 20 சதவீதம் தள்ளுபடியும்,  உடல் எடை அதிகமாக இருப்பவர்கள் எந்த தள்ளுபடியும் பெற முடியாத நிலையும் உள்ளது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்த முயற்சியை ஒரு சிலர் வேடிக்கையாக விளம்பர யுக்தியாக எடுத்துக் கொண்டாலும் பலரும் இதை உடல் அவமதிப்பு என்று கண்டித்தும் வருகிறார்கள். ஆனால் இந்த சர்ச்சைக்கு தற்போது அந்த உணவகம் எதுவும் பதில் அளிக்கவில்லை. இருப்பினும் சமூக வலைதளங்களில் இது பெரும் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.