அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப் வரலாறு காணாத அளவு வெற்றி பெற்றார். அவருக்கு அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் பாகிஸ்தானை சேர்ந்த ஒரு பெண் அளித்த பேட்டி சோசியல் மீடியாவில் வைரலானது அது என்னவென்றால் அந்த பெண் நான்தான் டொனால்ட் ட்ரம்பின் மகள் என கூறியுள்ளார். மேலும் டிரம்ப் தான் எனது தந்தை. இதில் யாரும் சந்தேகம் கொள்ள வேண்டாம்.

ஆங்கிலேயர்கள் இங்கு வந்து என்னை பார்க்கும் போது இந்த பெண் இங்கே என்ன செய்கிறார் என்று ஆச்சரியப்படுகிறார்கள். நான் ஒரு முஸ்லிம் மற்றும் அமைதியை விரும்புபவள். எனது மகளை உங்களால் கவனித்துக் கொள்ள முடியாது என என் தந்தை டொனால்ட் டிரம்ப் எப்போதும் என் அம்மாவிடம் கூறுவார். நான் இப்போது என் தந்தையை பார்க்க விரும்புகிறேன் என அந்த பெண் கூறியுள்ளார். அந்த வீடியோ சோசியல் மீடியாவில் வேகமாக பரவி வருகிறது.