பொதுவாகவே ரோஜாப்பூ என்றால் அனைவருக்கும் பிடிக்கும். இதுவரை பல ரோஜா பற்றி நீங்கள் அறிந்திருப்பீர்கள். ஆனால் கோடீஸ்வரர்கள் மட்டும் வாங்க கூடிய ஜூலியட் ரோஜா பற்றி உங்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இந்த ரோஜாவை கோடிகளுக்கு நீங்கள் சொந்தக்காரராக இல்லை என்றால் முகர்ந்து கூட பார்க்க முடியாது. இந்த ரோஜாவானது பூப்பதற்கு 15 ஆண்டுகள் ஆகும். நீங்கள் எப்பேர்பட்ட மோசமான மனநிலையில் இருந்தாலும் இந்த பூவின் மனம் உங்களை நொடி பொழுதில் மாற்றி விடும். அதனால்தான் இதற்கு ஜூலியட் ரோஜா என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளது.

மிகவும் அரிதாக பூக்கும் பூ என்பதால் தற்போது இதன் விலை 130 கோடி ரூபாய் என கூறப்படுகிறது. 2006 ஆம் ஆண்டு முதலில் வளர்க்கப்பட்ட இந்த ரோஜாவானதே டேவிட் ஆஸ்டின் என்பவரிடமிருந்து உள்ளது. பல சோதனைகளுக்குப் பிறகு இந்த விலை உயர்ந்த பூவை பூக்க வைத்துள்ளார். பல்வேறு வகையான ரோஜாக்களை கலந்து இதனை உருவாக்கப்பட்டுள்ளது என்றும் மிகவும் மதிப்பு மிக்கது அப்போது 90 கோடியாக இருந்த இதன் விலை தற்போது 130 கோடி ரூபாயாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.