
இணையதளம் மூன்று நாள்கள் இயங்காது என மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனால், வெளிநாடு செல்ல திட்டமிட்டிருப்பவர்கள் தங்கள் பயணத்தை முன்பே திட்டமிட்டு, தேவையான நடவடிக்கைகளை எடுத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இந்த இணையதளம் வருகிற செப்டம்பர் 20ஆம் தேதி இரவு 8 மணியிலிருந்து செப்டம்பர் 23ஆம் தேதி காலை 6 மணி வரை செயல்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, கடந்த ஆகஸ்ட் மாதமும் இதே காரணத்திற்காக பாஸ்போர்ட் சேவை இணையதளம் மூன்று நாட்கள் செயல்படாமல் இருந்தது குறிப்பிடத்தக்கது.
பாஸ்போர்ட் சேவை இணையதளம் செயல்படாத காலத்தில், புதிய பாஸ்போர்ட் விண்ணப்பங்கள், பாஸ்போர்ட் தொடர்பான வேறு ஏதேனும் மாற்றங்கள் செய்ய முடியாது. எனவே, வெளிநாடு செல்ல திட்டமிட்டிருப்பவர்கள், இந்த காலகட்டத்தை தவிர்த்து, முன்கூட்டியே தங்கள் பாஸ்போர்ட் தொடர்பான பணிகளை முடித்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.