விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான நீயா நானா நிகழ்ச்சியை ஆரம்பத்தில் இருந்து கோபிநாத் தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் ஏதாவது ஒரு தலைப்பு கொண்டு விவாதம் நடைபெறும். இந்த நிலையில் இந்த வாரம் ஒளிபரப்பாக உள்ள நீயா நானா நிகழ்ச்சியின் ப்ரோமோ காட்சி வெளியாகி மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. அதாவது இந்த வாரம் வறுமையிலும் பெரிய மதிப்பெண்களுடன் ஜெயித்த 12 ஆம் வகுப்பு மாணவர்கள் என்ற தலைப்பில் விவாதம் நடைபெற்று உள்ளது.

குடும்ப வறுமையில் 12ஆம் வகுப்பு தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுடன் ஒரு உரையாடல் நடந்த நிலையில் இவர்களின் பெற்றோர்கள் செய்யும் வேலை, அவர்கள் படும் கஷ்டங்கள் மற்றும் ஆசிரியர்கள் தங்களுக்கு செய்த உதவி என அனைத்தையும் மாணவர்கள் அரங்கத்தில் கூறியுள்ளனர். அப்போது ஒரு மாணவர் தற்போது 12ஆம் வகுப்பு முடித்திருக்கும் நிலையில் இவருடைய தந்தை ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்ட நிலையில் தாயும் கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். மாணவர்கள் அனைவரும் தங்கள் குடும்ப வறுமையை கூறி கண்ணீர் மல்க பேசும் வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Vijay Television இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@vijaytelevision)