ஹைதராபாத்தில் ஒவ்வொரு வருடம் ஆஸ்துமா நோயாளிகளுக்கு பத்னி சகோதரர்கள் முரேல் எனும் மீன் குஞ்சுகளை உயிரோடு மருந்துடன் வழங்குகின்றனர். இதற்கு தேவையான மீன் குஞ்சுகளை தெலுங்கானா மாநில மீன்வளத்துறை வழங்கி உள்ளது. உயிருடன் இருக்கும் மீன் குஞ்சுகளை மருந்தாக வழங்குவதற்கு அனுமதி இல்லாத காரணத்தால் இதனை மீன் பிரசாதம் என்று கூறி வருகிறார்கள். நோயாளிகள் பலர் வரிசையில் காத்திருந்து இந்த பிரசாதத்தை வாங்கிச் சென்ற சம்பவம் பலரையும் வியப்பில் ஆழ்த்தியது.