திருப்பூர் மாவட்டத்தில் உள்ளது ஒட்டப்பாளையம் காலனி.  இங்கு இரவு நேரத்தில் குட்டிசாத்தான்கள் நடமாடுவதாகவும் இரவு 7 மணி முதல் நள்ளிரவு ஒரு மணி வரை தொடர்ந்து வீட்டின் மேல் கூரைப் பகுதியில் கற்கள் விழுந்து கொண்டே இருப்பதாகவும் அங்குள்ள மக்கள் பீதியில் இருக்கிறார்கள் .

வீடுகளுக்கு மேலே விழுந்த கற்களை ஆதாரமாக சேமித்தும் வைத்திருக்கிறார்கள் .தெருவில் நடந்து செல்லும் பொழுது தானாகவே கற்கள் கீழே விழுவதால் இரவு ஆறு மணி ஆனதும் பலர் வீட்டுக்குள்ளேயே முடங்கி விடுகிறார்கள். சிலர் கருப்பராயன் கோயிலில் வந்து தங்குகிறார்கள்.