மத்தியப் பிரதேச மாநில தலைநகர் போபாலில் அந்த மாநிலத்தின் பாஜக அமைச்சர் பிரஹலாத் சிங் படேலின் என்பவருடைய பெரிய பங்களா உள்ளது. இந்நிலையில் அந்த பங்களாவின் அருகே வேப்ப மரத்தில் மாம்பழங்கள் தொங்கிக் கொண்டிருந்தூது. இதனை பார்த்து ஆச்சரியமடைந்த அவர், அந்த பழங்களை வீடியோவாக எடுத்து தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இந்நிலையில் இந்த வீடியோவானது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. மேலும், அந்த பகுதி மக்கள் அனைவரும் வேப்ப மரத்தில் தொங்கிய மாம்பழங்களை ஆச்சரியத்துடன் பார்த்துச் சென்றனர்.