மகாராஷ்டிரா மாநிலம் வாஷிம் என்ற மாவட்டத்தில் அரசு பள்ளி ஒன்று உள்ளது. இந்த பள்ளியில் ஒரே ஒரு மாணவர் மட்டும் படித்து வருகிறார். இந்த ஒரு மாணவனுக்காக மட்டுமே அந்த பள்ளி நடத்தப்பட்டு வருகிறது. 150 மக்கள் தொகை கொண்ட அந்த ஆரம்பப்பள்ளியில் நான்காம் வகுப்பு வரை கற்பிக்கப்படுகிறது. ஆனால் அந்த பள்ளியில் கார்த்திக் சேகர் என்ற இந்த மாணவர் மட்டுமே படித்து வருகிறார்.

அவருக்காக மதிய உணவு உட்பட அனைத்து வசதிகளையும் அரசு செய்து கொடுக்கிறது. கிஷோர் என்ற ஆசிரியர் இந்த ஒரு மாணவனுக்காக தினமும் 12 கிலோமீட்டர் பயணம் செய்து வந்து பாடம் நடத்துகிறார். இந்த ஆசிரியருக்கும் மாணவருக்கும் தற்போது பாராட்டுக்கள் குவிந்து வருகிறது