
பேய்க்கு மணமகன் தேவை என்று கன்னட நாளிதழில் வந்து விளம்பரம் பெரும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. 30 வருடங்களுக்கு முன்பு உயிரிழந்த பெண்ணுக்கு அதே நேரத்தில் உயிரிழந்த மணமகன் தேவை. சந்தேகமே வேண்டாம் இது திருமணத்திற்கு வரம் தேடும் விளம்பரம் தான். இது கன்னட நாளிதழ் ஒன்றில் வெளியாகியுள்ளது. மேலும் அதில் தங்களுடைய பங்கேரா என்ற சாதியில் தான் மாப்பிள்ளை பேய் வேண்டும் என்றும் கூறப்பட்டிருந்தது. கர்நாடகாவில் இது மிக சாதாரண விஷயம் தான் என்று கூறப்படுகிறது .அதாவது இந்த ஊர் மக்கள் இறந்த பின்பும் திருமண உறவை தொடங்க முடியும் என்ற வினோத நடைமுறையை செய்து வருகிறார்கள்.
இந்த நடைமுறை பேய் திருமணம் என்று அழைக்கப்படுகிறது. கேரளா மற்றும் கர்நாடகா கடலோரத்தில் வசிக்கும் ஒரு சமூகத்தை சேர்ந்த மக்கள் இறந்து போன திருமணமாகாத மகனுக்கும் மகளுக்கும் திருமணம் நடத்தி வைக்கும் வினோத பழக்கத்தை இவர்கள் கடைபிடித்து வருகிறார்கள் . இறந்தவரின் ஆன்மா அமைதி அடைய வேண்டும் என்பதற்காக நாம் செய்யும் சடங்குகள் ஏராளம்.
அதன்படி இவர்களும் இப்படி திருமணம் செய்து வைக்கிறார்கள் , திருமணம் சொர்க்கத்தில் நிச்சயக்கப்பட்டு பூமியில் நிறைவேற்றப்படுகிறது என்ற கருத்தை மனமார ஏற்றி நடந்து வருகிறார்கள். இந்த திருமண விழாவில் இறந்தவர்களின் உடன்பிறப்புகள் இறந்தவர்களுடைய உடலாக இருந்து மணமகன் மணமகளாக இருக்கும் பானைக்கு திருமண சட்டங்களை செய்து வைக்க வேண்டும்.
மஞ்சள் பூசி பூ வைத்து அலங்காரம் செய்யப்படும். அதேபோல மணமகன் பானைக்கும் உடை அணிந்து வைக்கப்படும். திருமணம் முடிந்த கையோடு மணமகள் பானை மணமகன் வீட்டிற்கு கொண்டு செல்லப்படுகிறது. பின்னர் தங்களுடைய குழந்தைகள் உயிருடன் இருந்தால் இரண்டு குடும்பத்தினரும் உறவு பாராட்டுவார்களோ அதே போன்று இரண்டு குடும்பத்தினரும் பழகுகிறார்கள்.