கன்னட சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் சேத்தன் சந்திரா. இவர் பெங்களூரில் உள்ள ஒரு கோவிலுக்கு தன் தாயாருடன் காரில் சென்று விட்டு வீட்டிற்கு திரும்பியுள்ளார். அப்போது 20 பேர் கொண்ட கும்பல் அவரை வழிமறித்து தாக்கியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த சேத்தன் மருத்துவமனையில் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பாக அவர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்த நிலையில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்நிலையில் உடல் முழுவதும் ரத்த காயங்களுடன் நடிகர் சேத்தன் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அவர் பேசியதாவது, ஒருவர் என்னிடம் கொள்ளையடிக்க முயன்றார். அந்த சமயத்தில் அங்கு வந்த 20 பேர் கொண்ட கும்பல் என்னை கொடூரமாக தாக்கினார். என் காரையும் சேதப்படுத்தினர். நான் அருகிலிருந்த மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றுக் கொண்டேன் என்று கூறியுள்ளார். மேலும் இந்த சம்பவம் கன்னட திரை உலகில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

 

 

View this post on Instagram

 

A post shared by Chetan Chanddrra (@chetan_chanddrra)