
விஜய்யின் தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாடு நேற்று விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டியில் விமர்சையாக நடைபெற்றது. மாநாட்டில் விஜய் அரசியல் கட்சி, தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கைகள், கோட்பாடுகள், அரசியல் தலைவர்கள், முன்னோடிகள் கொடி என ஒன்று விடாமல் அனைத்தையும் உணர்ச்சிகரமாக பேசி ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். அவர் கூறியதாவது, அறிவியல் தொழில்நுட்பம் மட்டும் தான் மாற வேண்டுமா? அரசியல் மாறக்கூடாதா அரசியல்வாதிகளை இகழ்ந்து பேச மாட்டேன்.
அதுக்காக கண்மூடியும் இருக்க மாட்டேன். ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்பதுதான் எங்கள் நிலைப்பாடு. என் தங்கை வித்யா இருந்தபோது என் மனம் எப்படி பாதிக்கப்பட்டதோ அதே போல் தான் தங்களை அனிதா இறந்தபோது எனக்கு பாதிப்பை ஏற்படுத்தியது. திறமை இருந்தும் இந்த நீட் தேர்வால் அந்த சகோதரி தனது உயிரை இழந்தார். நீட் தேர்வை நீக்க வேண்டும் என விஜய் உணர்ச்சி பொங்க பேசினார்.